அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு?.. இணை அமைச்சர் கொடுத்த தகவல்!

மத்திய ஊதியக் குழுவின் படி, ஒரு ஊழியரின் குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.7000 லிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஓய்வூதியத் தொகையும் 2.57 மடங்கு உயர்ந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3,500ல் இருந்து ரூ.9,000 ஆக உயர்ந்துள்ளது. 7வது ஊதியக் குழுவில் பரிந்துரைக்கப்பட்ட அதிகபட்ச ஊதியம் ₹2,25,000. கேபினட் செயலர் மற்றும் அதே பதவியில் உள்ள மற்ற உயர் பதவிகளின் சம்பளம் ₹2,50,000 இல் தொடங்குகிறது.
மத்திய அரசு ஊழியர்களின் ஆண்டு ஊதிய உயர்வு விகிதம் 3%. இது தவிர, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய 2 தவணைகளுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியப் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் நிலையில், 8வது ஊதியக் குழு பரிந்துரைகளை ஜனவரி 1, 2026 முதல் அமல்படுத்த வேண்டும். அதற்கான ஊதியக் குழுவை இப்போதே அமைக்க வேண்டும். ஆனால் இது தொடர்பாக மத்திய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில் நேற்று ராஜ்யசபாவில் 8வது ஊதியக்குழு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறுகையில், "மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக்குழு அமைக்க கடந்த ஜூன் மாதம் 2 மனுக்கள் வந்தன. ஆனால், 8வது ஊதியக்குழு அமைக்கும் திட்டம் எதுவும் தற்போது பரிசீலனையில் இல்லை" என்றார். இதன் மூலம், 8வது ஊதியக்குழு அமைக்கும் முடிவில் அரசு இன்னும் இல்லை என்பது தெளிவாகிறது. மத்திய அரசு 8வது ஊதியக்குழுவை அறிவித்தால்தான் மாநில அரசு ஊதியக்குழுவை அறிவிக்கும். தற்போது இது தொடர்பாக எந்த திட்டமும் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளதால், மாநில அரசு ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு இருக்காது என்பது உறுதியாகியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!