மாதம் ரூ.25,000 சம்பளம்... வடபழனி முருகன் கோவிலில் காலி பணியிடங்கள்!
சென்னையில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்று அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில். இந்தத் திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் புதியதாகத் தொடங்கப்பட உள்ள ஓதுவார் பயிற்சிப் பள்ளிக்கு முற்றிலும் தற்காலிகமாகத் தொகுப்பூதியத்தில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த பணியிடங்களை நேர்முகத்தேர்வு மூலம் நிரப்புவதற்குத் தகுதியுடைய இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதன்படி 1) தேவார ஆசிரியர் பணியிடம் : 1
மாதச்சம்பளம் : ரூ.25,000/-
கல்வித் தகுதி : சமய அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு நிறுவனங்கள் நடத்தும் மூன்றாண்டு "பன்னிரு திருமுறை" பாடப்பிரிவை முடித்ததற்கான தேவாரப் பாடசாலைகள் வழங்குகின்ற சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
2) இசை ஆசிரியர் பணியிடம் : 1
மாதச் சம்பளம் : ரூ.25,000/-
கல்வித் தகுதி:
குரலிசையில் மூன்று வருட பட்டயப்படிப்பு பெற்றிருக்க வேண்டும் அல்லது இசையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
3) தமிழ் ஆசிரியர் பணியிடம் : 1
மாதச் சம்பளம் : ரூ.25,000/-
கல்வித்தகுதி :
தமிழில் இளங்கலைப் பட்டப்படிப்பு மற்றும் இளங்கலை கல்வியியல் பட்டப்படிப்பு
விண்ணப்பப்படிவம் தகுதிகள் மற்றும் கூடுதல் தகவல்களுக்கு www.hrce.tn.gov.in மற்றும் www.vadapalaniandavar.hrce.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய தகுதிச் சான்றுகளுடன் நேரடியாகவோ தபால் மூலமாகவோ செப்டம்பர் 30ம் தேதி மாலை 05.45 மணிக்குள் திருக்கோயில் அலுவலகத்திற்கு வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். இதற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி
துணை ஆணையர் / செயல் அலுவலர்
அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில்,
வடபழனி,
சென்னை 600 026
தக்கார் துணை ஆணையர் /செயல் அலுவலர்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
