கள்ளச்சாராயம் விற்பனை... 5 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!

 
குண்டர்


 
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததில் 65 பேர் பலியாகி தமிழகம் முழுவதும்  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று ஒருவர் பலியாகி இருப்பதால் பலி எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்த இருதயராஜ், பழனிச்சாமி, சக்திவேல், குமார் மற்றும் அண்ணாதுரை ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளச்சாராயம்

இந்நிலையில் இவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.   அந்த உத்தரவின் படி இவர்கள் 5 பேரும் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 
கடலூர் மாவட்டம் பண்ருட்டி  வீரப்பெருமாநல்லூரில்  செயல்படாத நிலையில் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இந்த பெட்ரோல் பங்க்கில் சுமார் 2000 லிட்டர் மெத்தனால் மற்றும் கள்ளச்சாரயத்தில் கலந்துவிடும் ரசாயனங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  அந்த தகவலின் அடிப்படையில்  குறிப்பிட்ட பெட்ரோல் பங்க்கில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.  அப்போது 2000 லிட்டர் மெத்தனால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கள்ளச்சாராயம் பலி
இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த பெட்ரோல் பங்குக்கு சீல் வைத்துள்ளனர். மேலும் தமிழகத்தை உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் கைதான மாதேஷிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது அங்கு மெத்தனால் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அந்த சோதனையில் 2000 லிட்டர் மெத்தனால் இருப்பது தெரியவந்த நிலையில் பெட்ரோல் பங்குக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web