புதுச்சேரி மதுபானம் பதுக்கி விற்பனை.. போலீசில் கையும் களவுமாக சிக்கிய 2 பெண்கள் உட்பட 4 பேர்!

 
மதுபானம்

மதுராந்தகம் பகுதியில் புதுச்சேரி சாராயம், மதுபானம், கள் விற்றதாக 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்பிரனீத் உத்தரவின்படி, கலால் டிஎஸ்பி வேல்முருகன், மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் பரிபூரணம் தலைமையிலான போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் நடத்திய சோதனையில் மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வெண்ணிலா (48) என்பவர் புதுச்சேரி மது பாட்டில்களை விற்றது கண்டுபிடிக்கப்பட்டு அவரிடமிருந்து 270 புதுச்சேரி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொழுப்பேடு, சூணாம்பேடு சாலையில் வாகன சோதனையில் பைக்கில் வந்த சூணாம்பேடு கிராமத்தை சேர்ந்த தமிழ்வேந்தனிடம் இருந்து 144 புதுச்சேரி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

முன்னதாக போலீசாரை பார்த்த தமிழ்வேந்தன் பைக்கை விட்டுவிட்டு தப்பியோடினார். சிறுமயிலூர் கிராமத்தில் கள் விற்றுக்கொண்டிருந்த பிரியா (32), தென்பாக்கத்தில் கள் விற்ற சாந்தி (50) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மதுராந்தகம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுராந்தகம்  சிறையில் அடைக்கப்பட்டனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web