அடிதூள்... ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் - ராஷ்மிகா நடிக்கும் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு தொடங்கியது!
இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் ’சிக்கந்தர்’ படம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.சல்மான்கான் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்தப் படத்தில் முக்கிய கேரக்டரில் சத்யராஜ் நடிக்க உள்ளார்.
இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிலேயே சில அதிரடி ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக ஃபிளைட் ஆக்சன் காட்சிகள் குறித்த படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.இந்த படம் முழுக்க முழுக்க அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்தது எனவும் அது மட்டுமின்றி எமோஷனல் மற்றும் வலிமையான சமூக செய்தியை சொல்லும் படமாகவும் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ரம்ஜான் திருநாளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கி அடுத்தடுத்து விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’எஸ்கே 23’ என்ற படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார். அத்துடன் 'சிக்கந்தர்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடித்தவுடன் அவர் ’எஸ்கே 23’ படப்பிடிப்புக்கு செல்வார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!