சாத்தான்குளம் நூலகத்தில் சமத்துவ பொங்கல் திருவிழா!

 
சாத்தான்குளம்


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் இராம கோபால கிருஷ்ணர் அரசு கிளை நூலகத்தில் சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

சாத்தான்குளம் இராம கோபால கிருஷ்ணர் அரசு கிளை நூலகத்தில் நூலகர்கள் பணியாளர்கள் மற்றும் வாசகர்கள் சார்பில் சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் நடராசன் தலைமை தாங்கினார். வட்டார மனிதநேய நல்லிணக்கப் பெருமன்றச் செயலாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மகா பால்துரை முன்னிலை வகித்தார்.சாத்தான்குளம் நூலகர்  இசக்கியம்மாள் வரவேற்றார்.

இவ்விழாவில் பண்டாரபுரம் கிளை நூலகர் சிவரஞ்சனா முதலூர் கிளை நூலகர் எமரன்ஸியா பொத்தக் காலன்விளை கிளை நூலகர் நல் நூலகர் விருது பெற்ற சுப்பிரமணியன் பூச்சிக்காடு கிளை நூலகர் நமச்சிவாயம் சுப்பிரமணியபுரம் கிளை நூலகர் உமா மகேஸ்வரி சங்கரன்குடியிருப்பு கிளை நூலகர் இராஜ பிரபா பழனியப்பபுரம் கிளை நூலகர் கிருபை நூலக பணியாளர்கள் மைக்கேல் ராஜ் கனக முத்து மணிகண்டன் கலந்து கொண்டனர்.

மேலும் நூலக வாசகர்கள், போட்டித் தேர்வில் பங்குபெற பயிற்சி பெறும் இளைஞர்கள் இளம்பெண்கள் வாசகர் வட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. முடிவில் சாத்தான்குளம் கிளை நூலகர்  அன்னாள் ஜெயந்தி நன்றி கூறினார்.

இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web