நினைச்சாலே கண்ணீர் தான்... சதமடித்த சின்ன வெங்காயம் விலை...!!

 
வெங்காயம் காய்கறி கடை கோயம்பேடு சந்தை

தசரா, தீபாவளி, மார்கழி, பொங்கல் என இனி அடுத்தடுத்து  பண்டிகை காலம் தான். மழைக்காலம் தொடங்கினாலே காய்கறிகளின் விலை அதிகரித்து விடும் . சென்னையை பொறுத்தவரை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்தை பொறுத்தே விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.   அந்த வகையில் இஞ்சி, வெங்காயம் வரத்து குறைவாக இருப்பதால்   விலை சற்று அதிகரித்துள்ளது.

வெங்காயம்


இதில் சின்னவெங்காயம் ஒரு கிலோ ரூ130 வரை விற்பனை செய்யப்பட்டுவருகிறது . நேற்றுவரை ரூ70 ஆக இருந்த சி.வெங்காயம் இன்று கிலோவுக்கு ரூ50 வரை அதிகரித்து இருப்பது இல்லத்தரசிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இன்றைய நிலவரப்படி காய்கறிகளின் விலை (மொத்த விலை பட்டியல் கிலோவில்)

கோயம்பேடு மார்க்கெட் விடுமுறை! மக்களே தேவையான ஏற்பாட்டை செய்துக்கோங்க!


உருளைக்கிழங்கு - ரூ32 
பீட்ரூட் - ரூ40  
பச்சை மிளகாய் -ரூ30
தக்காளி -ரூ10
சின்ன வெங்காயம் -ரூ100 முதல் ரூ130 
பெரிய வெங்காயம் -ரூ 30  
பண்டிகை காலம் என்பதாலும் மழையின் காரணமாக வரத்து குறைந்து இருப்பதாலும்  அனைத்து காய்கறிகளும் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதிலும் சின்ன  வெங்காயத்தின் விலை ரூ100 ஐ தாண்டியிருப்பதால் நடுத்தர    ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த இல்லத்தரசிகள் கலக்கத்தில் உள்ளனர்.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web