தன்பாலின உறவு வைத்துக் கொண்டால் மரண தண்டனை.. புதிய சட்டத்திற்கு ஒப்புதல்..!

 
LGBTQ

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

இவர்களின் கோரிக்கையை ஏற்று சில நாடுகள் அங்கீகரித்து அதற்கான சட்டங்களும் இயற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் தன்பாலின உறவு வைத்துக்கொள்வது தண்டனைக்குரிய குற்றம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி தன்பாலின திருமணத்திற்கு எதிராக புதிய சட்டத்தை இயற்றியுள்ளார்.

உகாண்டாவில் இந்த புதிய சட்டம், தன்பாலின சேர்க்கை, திருமணம் போன்றவற்றுக்கு வாழ்நாள் சிறை மற்றும் மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் வழங்க வழிவகை உள்ளது. இந்த சட்டத்துக்கு மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அமெரிக்க உட்பட மேற்கத்திய கடும் நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

LGBTQ

இந்த சட்டப்படி, LGBTQ சமூகத்தைச் சார்ந்தவர் என்று கண்டறிவது தவறு இல்லை. ஆனால் அதனைத்தொடர்ந்து, தன்பாலின திருமணத்தில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுடனும், சிறார்களுடனும், சமூகத்தின் பிற பாதிக்கப்படக்கூடிய பிரிவைச் சேர்ந்தவர்களுடனும் உடலுறவு கொள்வதும் இதில் அடங்கும். உகாண்டாவில் காலனித்துவ கால சட்டத்தின் கீழ் தன்பாலின ஈர்ப்பு ஏற்கனவே சட்டவிரோதமானது. அந்த வழக்கின் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

LGBTQ

இருப்பினும், இந்த சட்டத்தின் பொருளாதார விளைவுகள் குறித்து அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்த சட்டத்திற்குச் சர்வதேச அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பிடத்தக்க வகையில், ஆப்பிரிக்காவில் உள்ள 54 நாடுகளில், 30க்கும் மேற்பட்ட நாடுகளில் தன்பாலின உறவு குற்றமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web