பகீர்... டிராக்டரால் மோதி இன்ஸ்பெக்டர் படுகொலை... தொடரும் மணல் மாஃபியாக்கள் அட்டூழியம்..!!

 
மணல் மாபியா

பீகார் மாநிலம், ஜமுய் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தல் நடைபெற்று வருவதாக  காவல்துறையினருக்கு ரகசிய  தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த  காவல்துறை  ஆய்வாளர் மற்றும்   ஊர்க்காவல் படையினரும் நேற்று சென்றனர்.  கர்ஹி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மணல் கடத்தல் கும்பல் மணலை டிராக்டர்களில் கடத்திக் கொண்டிருந்தது.அங்கு சென்ற காவல் ஆய்வாளர் பிரபாத் ரஞ்சன், மணல் கடத்தல் கும்பலை கைது செய்ய முயற்சித்தார்.   மணல் மாஃபியாக்கள் அவர் மீது டிராக்டரை வைத்து மோதினர்.

மணல் மாபியா

 இந்த தாக்குதலில்  காவல் ஆய்வாளர் பிரபாத் ரஞ்சன், ஊர்க்காவல் படை  ராஜேஷ் குமார் சாவ்  இருவர் மீதும்  டிராக்டர் மோதியதில் படுகாயம் அடைந்தனர்.
இவர்களை உடனடியாக காவல்துறையினர்  மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி காவல் ஆய்வாளர் பிரபாத் ரஞ்சன் உயிரிழந்தார்.   ராஜேஷ்குமார் சாவ் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஏற்கனவே நவம்பர் 11ம் தேதி  இதே போல் ஒரு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.  சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிராக்டரை  காவல்துறையினர்   தடுத்தனர். இதில் டிராக்டர் மோதி ஊர்க்காவல் படை காவலர் ஒருவர் கொல்லப்பட்டார். அதற்கு அடுத்ததாக தற்போது காவல் ஆய்வாளர் கொல்லப்பட்டுள்ளார்.

மணல் மாபியா


இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன்  டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  டிராக்டர் ஓட்டுநரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இக் கொடூர சம்பவம் குறித்து மூத்த காவல்துறை அதிகாரி  , " பாட்னா, போஜ்பூர், ரோஹ்தாஸ், அவுரங்காபாத், சரண் மற்றும் வைஷாலி  மாவட்டங்களில் காவலர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளைக் குறிவைத்து மணல் மாஃபியாக்கள் நடத்தும் வன்முறை தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த தாக்குதல்கள் சட்டம் ஒழுங்கிற்கு சவால் விடுவதாக அமைந்துள்ளது" எனக் கூறியுள்ளார். மணல் கடத்தலைத் தடுக்கச் சென்ற  காவல் ஆய்வாளர் டிராக்டர் ஏற்றிக் கொலை செய்யப்பட்ட சம்பவம்  மாநிலம்முழுவதும்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web