சென்னையில் மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் பலி... மக்கள் சாலை மறியல்!

 
தூய்மை பணியாளர்

சென்னை கண்ணகி நகரில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

சென்னையில் நேற்று அதிகாலை முதலே இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த பலத்த மழையால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மழை நீா் தேங்கி நின்றது. இந்நிலையில் சென்னை கண்ணகி நகரில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் ஒருவர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த ஒப்பந்த பணியாளர் வரலட்சுமி(30). இவர் இன்று காலை அந்த பகுதிகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த போது,  இரவு பெய்த மழையால் தேங்கிருந்த மழைநீரில் கால் வைத்த போது மின்சாரம் பாய்ந்ததில் தண்ணீரில் விழுந்துள்ளாா். இதைப் பாா்த்த அப்பகுதியினா் அவரை மீட்க முயற்சி செய்தனா். ஆனால் அவா்களால் மீட்க முடியவில்லை. சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

மின்சாரம்

இது குறித்து தகவலறிந்த மின்வாரிய ஊழியா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, மின்சாரத்தைத் துண்டித்து வரலட்சுமி உடலை மீட்டனா். இந்த சம்பவம் மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் நடந்ததாக அந்த பகுதி மக்கள் மின்சார வாரியத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகினனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?