முதல்வர் ஸ்டாலினை சந்தித்த சரத்குமார், ராதிகா... வைரல் புகைப்படங்கள்!

 
சரத்குமார் ராதிகா

 தமிழ் திரையுலகின் சுப்ரீம் ஸ்டார் நடிகர் சரத்குமார் .இவரது மகள் நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பை தொழிலதிபர் நிக்கோலய் சச்தேவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த விழாவில்  குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு தான் இது குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள்  வெளியாகி வைரலாகின.தற்போது   ஜுலை 2ம் தேதி இவரது  திருமணம் தாய்லாந்தில் நடைபெற உள்ளது.  

சரத் ராதிகா

அதன்பிறகு சென்னையில் உள்ள ஹோட்டலில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கும்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில், சரத்குமார், ராதிகா, வரலட்சுமி மற்றும் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து, திரை பிரபலங்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கு திருமணத்திற்கான அழைப்பிதழை  வழங்கி வருகின்றனர்.அந்தவகையில் இன்று, தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வரலட்சுமியின் திருமண அழைப்பிதழை வழங்கினர். இதற்காக  சரத்குமார், ராதிகா, வரலட்சுமியும் சென்றிருந்தனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.ஏற்கனவே  நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்ட நிலையில் நேற்று தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கருணாநிதியை நேரில் சந்தித்து வரலட்சுமியின் திருமண அழைப்பிதழை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web