சரெலென சரிந்தது விலை... அதிகாலையிலேயே குவிந்த மக்கள்... அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி!

 
மீன்

தமிழகத்தில் விதிக்கப்பட்டிருந்த மீன் பிடித் தடைக் காலம் முடிவடைந்த நிலையில், இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாலை முதலே மீன் மார்க்கெட்களில் அசைவப் ப்ரியர்களின் கூட்டம் அதிகரிக்க துவங்கியது. மீன் பிடி தடைக்காலமும் முடிவடைத நிலையில், மீன்களின் விலையும் சரெலென வெகுவாக குறைந்து விற்பனைச் செய்யப்பட்டது. திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை கடலோர மாவட்டத்தில் வசித்து வரும் 1,00,000க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ள நிலையில், கணிசமான அளவில் வலையில் மீன்கள் சிக்கியதாக தெரிவித்துள்ளனர். 

படகுகள்

சென்னை காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் மட்டுமே 1000க்கும் மேற்பட்ட  மீனவர்கள் விசைப்படகுகள் மூலமாக ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றனர். காசிமேடு மீன் மார்க்கெட்டில் அதிகாலையில் இருந்தே மீன்களை வாங்க மக்கள் ஆர்வமுடன் திரண்டிருந்தனர். 

மீன் கடை மார்க்கெட் அசைவம்

அதே சமயம் நேற்றைய ஆட்டு ஏல சந்தையில், மீன் பிடி தடைக்காலம் முடிவடைந்ததையடுத்து, பெரிய அளவில் ஏலம் கேட்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இறைச்சி கடைகளில் வழக்கமான கூட்டத்தை விட இன்று குறைந்தளவே காணப்பட்டது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web