புட்டபர்த்தியில் சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா... பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தி கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்!

 
புட்டபர்த்தியில் சத்ய சாய்பாபா  மோடி

ஆந்திரா மாநிலம், புட்டபர்த்தியில் நடைபெற்ற சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை கலந்து கொண்டார். சத்ய சாய்பாபா நினைவிடத்திற்கு காலை 10:30 மணியளவில் சென்ற பிரதமர் மோடி, சாய்பாபாவின் மகா சமாதியில் அஞ்சலி செலுத்தி, வேத பண்டிதர்கள் மந்திரங்கள் முழங்கும் வழிபாட்டில் கலந்துக் கொண்டு தியானத்தில் ஈடுபட்டார்.

மோடி சாயி

இதையடுத்து நூற்றாண்டு விழாவில் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. பிரபல பாடகி சுதா ரகுநாதன் குழுவின் இசை நிகழ்ச்சி, நாட்டியக்கலைஞர்களின் நடனங்களையும் பிரதமர் மோடி, சிறப்பு விருந்தினர்கள் கண்டு களித்தனர். இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கிரிக்கெட் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நூற்றாண்டு விழாவில், ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் வாழ்க்கை மற்றும் போதனைகளை கெளரவிக்கும் வகையில் நினைவு நாணயம் மற்றும் தபால் தலைகள் தொகுப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். நிகழ்ச்சியின் போது அவர் மக்களிடம் உரையாற்றினார். 

மோடி

அதன்பிறகு, பிரதமர் மோடி கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறவுள்ள தென்னிந்திய இயற்கை வேளாண் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார். இந்த நிகழ்ச்சியில், நாட்டில் 9 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில், பி.எம். கிசான்’ திட்டத்தின் 21-வது தவணையாக ரூ.18,000 கோடி நிதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு, அவர்களுக்கு கௌரவிப்பு செய்யப்பட உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!