38 வருடங்களுக்குப் பிறகு ரஜினி படத்தில் இணையும் சத்யராஜ்... வேறு யார் எல்லாம் நடிக்கிறாங்க தெரியுமா?!

 
சத்யராஜ் ரஜினி

 


38 வருடங்களுக்கு பிறகு ரஜினி படத்தில் இணைகிறார் சத்யராஜ். இந்த இடைப்பட்ட காலங்களில் ரஜினியின் பல படங்களில் நடிப்பதற்கு வந்த வாய்ப்பை சத்யராஜ் நிராகரித்த நிலையில், தற்போது தலைவர் 171 படத்தில் சத்யராஜ் நடைக்க சம்மதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்களுடன் நடிகை ஸ்ருதிஹாசனும் நடிக்கிறார்.

 

ரஜினி சத்யராஜ்
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்க உள்ளார் ரஜினி. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில் படத்தின் டீசர் வருகின்ற ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகும் என பட குழுவினர் சமீபத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தனர். 

ரஜினி சத்யராஜ்
இந்நிலையில், தலைவர் 171 படத்தில் சாண்டி மாஸ்டர், நடிகை ஷோபனா, ஷாருக்கான் என பலரும் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்தது. படத்தில் நடிகர் ரஜினி தாதா கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் இந்த படத்துக்கு கழுகு என்று தலைப்பிட படக் குழுவினர் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தலைவர் 171 படத்தில் நடிகர் சத்யராஜ் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web