சாட்டை துரைமுருகன் திடீர் கைது... பரபரக்கும் அரசியல் வட்டாரம்!

தமிழகத்தில் நேற்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் பதிவான வாக்குகள் ஜூலை 13ம் தேதி எண்ணப்பட இருக்கும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சார மேடையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி , தமிழக அரசு குறித்து அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டு இருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலம் வந்த நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகன் திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!