அடிக்கடி உல்லாசம்... திடீரென மறுத்த கள்ளக்காதலி... நெருக்கமான வீடியோவை கணவருக்கே அனுப்பி பழிவாங்கிய இளைஞன்!

 
சிவா

அடிக்கடி தன்னுடன் உல்லாசமாக இருந்து வந்த  பெண், திடீரென உல்லாசத்துக்கு மறுத்த நிலையில், ஆத்திரத்தில் நெருக்கமாக உல்லாசம் அனுபவித்து வந்த பெண்ணின் அந்தரங்க வீடியோவை அவரின் கணவருக்கே அனுப்பி அதிர்ச்சி அளித்திருக்கிறார் வங்கி ஊழியர் ஒருவர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடவீக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி மகன் சிவா (35).  தனியார் வங்கி ஊழியர். கடன் தொகையை வசூலிக்க சென்ற போது ஜெயங்கொண்டம் அருகே உள்ள மருங்களக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த 39 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியது. பெண்ணின் கணவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

பெண் வீடியோ

சிவாக்கும் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் பணம் கொடுப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் வழக்கம் போல் சிவா பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்தபோது, அவள் மறுத்து விட்டாள். இதனால் ஆத்திரமடைந்த சிவா, அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை தனது நண்பர்களுடன் பகிர்ந்துள்ளார்.

அவரது நண்பர் ஒருவர் அந்த வீடியோவை சென்னையில் உள்ள பெண்ணின் கணவருக்கு அனுப்பியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண்ணின் கணவர் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் வங்கி ஊழியர் சிவாவை இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி! 

From around the web