ஒரு ஊழியரும் இல்லாத எஸ்.பி.ஐ கிளை.. இணையத்தில் பதிவிட்ட வாடிக்கையாளரை மிரட்டிய வங்கி!

 
எஸ்.பி,ஐ

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாலி பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் மாலை 3 மணியளவில் தனது பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கி கிளைக்கு சென்றார். ஆனால் அங்கு ஊழியர்கள் இல்லை. இதுகுறித்து  கேட்டபோது, ​​ஊழியர்கள் மதிய உணவிற்கு சென்றதாக தகவல் கிடைத்தது, ஆனால் மதிய உணவு இடைவேளை என்று எதுவும் இல்லை என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.


இந்நிலையில், ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக மதிய உணவிற்கு சென்றதாக வாடிக்கையாளர் பதிவிட்டு, புகைப்படத்தை ஷேர் செய்து வங்கியை டேக் செய்துள்ளார். இதற்கு எஸ்பிஐ, "உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக கிளை வளாகத்திற்குள் புகைப்படம்/வீடியோ எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.

இவை தவறாகப் பயன்படுத்தப்பட்டால் நீங்கள் பொறுப்பேற்கலாம். எனவே, இவற்றை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என பரிந்துரைக்கிறோம்.'' என, புகார் அளித்த வாடிக்கையாளருக்கு, தீர்வு தராமல், மிரட்டும் தொனியில் பதிவிட்டனர். இந்த பொறுப்பற்ற பதிலை ஏற்க முடியாது என, நெட்டிசன்கள் எதிர்ப்பு வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!