செங்கோலுக்கு வந்த சோதனை! ‘அந்த’ கேள்வி.. டென்ஷனான அமித்ஷா... வேலை நீக்கம் செய்ததாக ‘தினமலர்’ அறிவிப்பு!

 
அமித்ஷா

உண்மையை உரக்க சொல்வோம், நெற்றிக்கண் திருப்பினும் குற்றம் குற்றமே, தமிழால் இணைவோம் என இன்னும் இன்னும் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கும் பத்திரிக்கைகளில் பணியாற்றுபவர்களின் கதி கேள்விக்குறி தான். எந்த நிர்வாகத்தில் வேலை செய்கிறோம்? அவர்களின் மனநிலை என்ன என்பதைப்பொறுத்துத் தான் வேலை செய்ய வேண்டும். இல்லை என்றால் இன்றைய காலகட்டத்தில் உங்கள் கொள்கைகளுக்கு ஏற்ற பத்திரிக்கையில் துண்டைப் போட்டு வைக்க வேண்டும். 

விஷயத்துக்கு வருவோம். பிரம்மாண்டமாய் கட்டப்பட்ட நாடாளுமன்ற வளாகத்தை பிரதமர் மோடி திறக்க இருக்கிறார். அது தான் தற்பொழுது பேசு பொருளாகி இருக்க வேண்டும். ஆனால் அதை விடுத்து பல்வேறு சர்ச்சைகள் தான் தற்பொழுது பேசு பொருளாகி வருகிறது.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேஜ கூட்டணி அரசு பதவிக்கு வந்து 9 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டில்லியில் செய்தியாளர்களை கடந்த 24ம் தேதி சந்தித்தார். அப்போது மத்திய அரசின் கடந்த 9 ஆண்டு கால சாதனைகளை பட்டியலிட்டார். அதனைத் தொடர்ந்து, புதிய பார்லிமென்ட் கட்டடம் திறப்பு விழா தொடர்பாக பேசிய அமித்ஷா, "1947 ஆகஸ்ட் 14ம் தேதி நள்ளிரவில் நாடு சுதந்திர மடைந்த போது, பிரிட்டீஷாரிடம் இருந்து ஆட்சி அதிகாரம் கைமாறிய போது, தமிழகத்தில் இருந்து திருவாவடுதுறை ஆதீனம், நேருவிடம் இந்த செங்கோலை வழங்கினார்கள்.

செங்கோல்

இந்திய கலாச்சாரத்தில், குறிப்பாக தமிழகத்தில் சோழர் ஆட்சியில் முக்கியத்துவம் பெற்றிருந்த செங்கோல், புதிய பார்லிமெண்ட் கட்டிடத்தில் நிறுவப்படும்" எனக் கூற அனுபவம் வாய்ந்த மூத்த நிருபர் வெங்கடராமன், "செங்கோல் குறித்து நீங்கள் மிக விரிவான விளக்கத்தை அளித்தீர்கள். செங்கோல், தமிழக மன்னர்களான சோழ மன்னர்கள் மட்டும் வைத்திருக்கவில்லை. தமிழகத்தை ஆண்ட சேர, பல்லவ மற்றும் பாண்டிய மன்னர்கள் கூட ஏன் தென்னிந்திய மன்னர்கள் எல்லோருமே வைத்திருந்தனர். செங்கோல் என்பது நல்லாட்சிக்கு அடையாளம். தென்மாநில மக்கள், ஏன் பாஜகவுக்கு கதவை மூடி விட்டார்கள்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அதற்கு அமித்ஷா, "உங்கள் கேள்வியை புரிந்து கொண்டேன். அடுத்த கேள்வி..  என்றார்.

தொடர்ந்து, "ஏன் எனது கேள்விக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை?" என்று கேட்க அடுத்த கேள்விக்கு சென்றிருக்கிறார் அமித்ஷா.

அமித்ஷா

இப்பொழுது டெல்லி நிருபர் வெங்கடராமனை வேலையை விட்டு நீக்கி இருப்பதாக தினமலர் தெரிவித்துள்ளது. இதில் எங்கே நீதி நேர்மை எல்லாம் இருக்கிறது என தெரியவில்லை. நீதி நேர்மையை நிலைநாட்ட செங்கோலை அடையாளமாக அந்த காலத்து மன்னர்கள் வைத்திருந்தார்கள். செங்கோல் நமது அடையாளம்... நம் ஆட்சியின் அடையாளம் என கருதியிருந்தால், உடனடியாக பதறியடித்துக் கொண்டு அமித்ஷா, வெங்கடராமனின் பணி நீக்கம் குறித்து கவலைத் தெரிவித்து தினமலர் நிர்வாகிகளிடம் தனது அதிருப்தியைத் தெரிவித்திருக்க வேண்டும் தானே?

திரெளபதி முர்மூவை ஏன் திறப்பு விழாவிற்கு அழைக்கவில்லை என எதிர்கட்சிகள் அனைத்தும் ஓர் அணியில் சேர்ந்து கொண்டு, ஒருபுறம் விழாவில் கலந்து கொள்ள மாட்டோம் என பிரச்சனை செய்கிறார்கள். இப்பொழுது பத்திரிக்கையாளருக்கு பங்கம், இன்னும் இந்த செங்கோல் என்னென்ன பாடுபடுத்தப் போகிறதோ என இப்பொழுது டெல்லி வட்டாரத்தில் உச்கொட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

நல்லது நடந்தால் சரிதான்!

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

 

From around the web