பள்ளி பேருந்து கோர விபத்து.. 7 பேர் பலி.. 20க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு படுகாயம்!

 
 சிரியா விபத்து
பள்ளி பேருந்து ஆற்றில் கவிழந்து கோர விபத்துக்குள்ளானதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயமடைந்தனர். வடமேற்கு சிரியாவில் உள்ள தர்குஷ் நகருக்கு அருகே பள்ளி பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. ஆதரவற்றோருக்கான பள்ளியில் இருந்து மாணவர்கள் மற்றும் சில ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று ஒரண்டஸ் ஆற்றங்கரை வழியாக மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி பள்ளத்தாக்கில் உள்ள ஆற்றில் விழுந்தது.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள் உட்பட 20 பேர் காயமடைந்தனர். மிட்புக் குழுவினர் மலை குன்றின் ஓரத்திலும் ஆற்றிலும் சுமார் 6 மணிநேரம் தேடியதாக உள்ளூர் சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

பேருந்து சாலையை விட்டு விலகிச் செல்ல காரணம் என்ன? என்பது உடனடியாகத் தெரியவில்லை. இதுகுறித்து காவல் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web