பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை. .. கலெக்டர் அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் கடந்த சில மாதங்களாகவே புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இவை அனைத்தும் நிறைவடைந்த நிலையில் வெள்ளிக்கிழமை இன்று மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் , மற்ற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்காணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கோட்டை மாரியம்மன் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து சேலம் மாவட்டம் முழுவதும் இன்று பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் கும்பாபிஷேக விழா காரணமாக சேலம் பட்டைக்கோயிலில் இருந்து பழைய பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் இரண்டாவது அக்ரஹாரம், டவுன் ரயில் நிலையம், திருவள்ளுவர் சிலை வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்லுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!