பகீர்... பள்ளி மாணவி நாக்கை அறுத்து காணிக்கை... !
தொழில்நுட்ப வளர்ச்சி எத்தனை தான் வளர்ச்சி அடைந்தாலும் சில மூடநம்பிக்கைகளை சில இடங்களில் தொடர்ந்து செய்து வருகின்றனர். அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் சக்தி மாவட்டத்தில் மூடநம்பிக்கையின் உச்சமாக 11ம் வகுப்பு மாணவி ஒருவர் தனது நாக்கை அறுத்து காணிக்கை செலுத்தியுள்ளார்.
பள்ளிமாணவி நாக்கை அறுத்து தியானத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில், தப்ரா காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட தேவர்கட்டா பகுதியில் உள்ள ஆச்சரிபாலி கிராமத்தில் வசித்து வரும் 11ம் வகுப்பு பயிலும் 16 வயது மாணவி, நேற்று முன்தினம் டிசம்பர் 30ம் தேதி திங்கட்கிழமை காலை 7 மணியளவில் தனது வீட்டிற்கு அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்றுள்ளார்.
அங்கு அவர், தனது நாக்கை அறுத்துக்கொண்டு அதே கோயிலில் தியானத்தில் ஈடுபட தொடங்கினார். அந்த தியானத்தில் இருந்து யாரேனும் தன்னை எழுப்பினால் அவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என கடிதம் எழுதிவைத்துவிட்டு தியானத்தில் ஈடுபட தொடங்கினார்.
இந்த மூடநம்பிக்கை சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் 108 ஆம்புலன்ஸ் உடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஆனால், துரதிஷ்டவசமாக அந்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அப்பகுதி மக்கள் மறுத்து விட்டனர்.
அச்சிறுமியின் பெற்றோரை சமாதானம் செய்யவும் அதிகாரிகள் முயற்சித்தனர். நாக்கை அறுத்துக்கொண்டதால் கோயில் வளாகத்தில் பல இடங்களில் ரத்த கறை படிந்துள்ளது. கடவுள் மீது உள்ள பக்தியால் பல்வேறு ஏற்கத்தகு நேர்த்திக்கடன்கள் உள்ள சமயத்தில் இப்படியாக உடல் உறுப்புகளை அறுத்துக்கொள்ளும் மூட நம்பிக்கை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!