நவம்பர் 18 வரை பள்ளிகள் மூடல்... மூச்சுக்காற்றுக்கு தவிக்கும் தலைநகரம்...!!

 
மூச்சு திணறும் தமிழகம்!! முக்கிய நகரங்களில் அதிகரித்த காற்று மாசு!!

தீபாவளி நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தலைநகரில் ஏற்கனவே காற்று மாசுபாடு காரணமாக இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு மிக அதிக அளவில் அதிகரித்து வருகிறது. காற்றின் தரக்குறியீடு மிக அபாயகரமான நிலையில் இருந்து வருவதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

டெல்லி மாசு காற்று வாகனம் பனி

ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் விவசாயக் கழிவுகளை எரிப்பது, தொழிற்சாலைகளில் வெளியேறும் நச்சுவாயுக்கள், வாகனங்களின் எண்ணிக்கை உயர்வு ஆகியவை காரணமாக காற்றுமாசு அதிகரித்து இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த 4   மாநிலங்களும் விவசாயக் கழிவுகளை எரிப்பதை நிறுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

காற்று மாசுபாடு

இந்நிலையில் தலைநகர்  டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளின் டிசம்பர் குளிர்கால விடுமுறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.  அதன்படி  நவம்பர் 9 முதல் நவம்பர் 18ம் தேதி வரை  குளிர்கால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக  டெல்லி மாநில கல்வி இயக்குநரகம்  அறிவித்துள்ளது.ஏற்கனவே  மோசமான காற்றின் தரம் காரணமாக நவம்பர் 3 முதல் நவம்பர் 10ம்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த விடுமுறை நவம்பர் 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web