மாணவர்கள் குஷியோ குஷி.... பள்ளிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை... !
தமிழகத்தில் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்க இருப்பதால் மாணவர்கள் குஷியில் உள்ளனர்.

அதன்படி செப்டம்பர் 5 ம் தேதி மிலாடி நபி திருநாளை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மிலாடி நபி வெள்ளிக்கிழமையில் வருவதால் அதற்கு அடுத்த நாட்களான சனி, ஞாயிறு வருவதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வரஉள்ளதால் பெற்றோர்கள் தற்போதே வெளியூர் பயணங்களுக்கு திட்டமிட்டு வருகின்றனர்.

காலாண்டு தேர்வுக்கு முன் மாணவர்களுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்க இருப்பதால் இந்த விடுமுறை மாணவர்களிடையே குஷியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் விடுமுறை கொண்டாட்டத்தை முடித்த பிறகு மாணவர்கள் காலாண்டு தேர்வுக்கு உத்வேகமாக தயாராக இது நல்வாய்ப்பாக அமையும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
