நாளை டெட் தேர்வு... பள்ளிகளுக்கு விடுமுறை.... !

 
விடுமுறை

 

புதுச்சேரியில் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) காரணமாக, 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பாடம் எடுத்துக்கொள்வதற்கான இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பெருமளவில் தேர்வில் பங்கேற்க உள்ளனர். இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, நாளை (15ம் தேதி) புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

டெட்

இது தொடர்பாக வெளியான கல்வித்துறை சுற்றறிக்கையில், ஏப்ரல் மாதத்தில் வெப்பஅலை காரணமாக 28, 29, 30 ஆகிய தேதிகளில் வழங்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்ய சில சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயக்கப்பட்டதாகவும், ஏப்ரல் 30ம் தேதிக்கான ஈடுசெய்தல் நாளை 15ம் தேதி நடைபெற இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதே நாளில் டெட் தேர்வு நடைபெறுவதால் ஆசிரியர்களுக்கு பங்கேற்பு சிரமமாக இருப்பதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.

டெட்

கோரிக்கையை கருத்தில் கொண்டு நாளைய தினம் விடுமுறை வழங்கப்படுவதுடன், அதன் பதிலாக வரும் ஜனவரி 3ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய வகுப்புகள் புதன்கிழமை கால அட்டவணைப்படி நடைபெறும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!