9ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்... பள்ளி முதல்வர் கைது!
9-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தனியார் பள்ளி முதல்வரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.தர்மபுரி மாவட்டம், ஏரியூர் மற்றும் அழகா கவுண்டனூர் ஆகிய ஊர்களில் 2 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. சிடுவம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வரும் கண்மலர், அவருடைய கணவர் நடராஜ் ஆகியோர் இந்த 2 பள்ளிகளை நடத்தி வருகிறார்கள்.

இவர்களுடைய மகன் வினுலோகேஸ்வரன் (33). இவருக்கு திருமணமாகி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பள்ளியை இவர் தான் முழுவதுமாக கவனித்து வருகிறார். மேலும் இவர் பள்ளி முதல்வராகவும் உள்ளார். அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் வினுலோகேஸ்வரன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் தகாத முறைகளில் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மாணவி திடீரென பள்ளிக்கு செல்லாமல் கடந்த 2 நாட்களாக வீட்டில் இருந்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் மாணவியிடம் கேட்டபோது, நடந்தவற்றை கூறி மாணவி கதறி அழுதுள்ளார். இதையறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்ேபரில், தனியார் பள்ளி முதல்வர் வினுலோகேஸ்வரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரை நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
