இன்று விடுமுறை முடிந்து பள்ளி திறப்பு... பேருந்து ஓட்டுனர், நடத்துனர்கள் இதையெல்லாம் செய்ய அரசு அறிவுறுத்தல்!

 
பேருந்து
கோடை விடுமுறை முடிந்து இன்று ஜூன் 10ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், இன்றே அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பள்ளிகள் திறக்கும் முதல் நாளான இன்று மாணவர்களுக்கு காலை சர்க்கரை பொங்கல் உணவாக வழங்க சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பேருந்து மாணவர்கள்

இந்நிலையில் பேருந்துகளில் சென்று பயிலும் மாணவர்களின் வசதிக்காக  அரசு போக்குவரத்து கழகம்  செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பேருந்து மாணவர்கள்

அதன்படி  2024 ஜூன் பத்தாம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட இருப்பதால் 2023-24 ம் ஆண்டில் வழங்கப்பட்ட பயண அட்டையை பயன்படுத்திக் கொள்ள மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று பள்ளிகள் திறப்பையடுத்து அனைத்து பேருந்துகளும் சரியாக இயங்குவதை கண்காணிக்க தமிழகம் முழுவதும் அலுவலர்கள் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. உரிய பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி மாணவர்களை பாதுகாப்பாக ஏற்றி இறக்கிச் செல்ல வேண்டும் அனைத்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web