மாணவர்களே தயாராகிட்டீங்களா? நாளை முதல் பள்ளிகள் தொடக்கம்!!

 
விடுமுறை

தமிழகத்தில்  நாளை ஜூன் 12ம் தேதி திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. கோடை விடுமுறைக்கு பிறகு  ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் வெயிலின் தாக்கம் குறையவே இல்லை. இதனால் சமூக ஆர்வலர்களும், பெற்றோர்களும் விடுமுறையை நீட்டிக்க சொல்லி பரிந்துரை செய்தனர். இந்த பரிந்துரையின் அடிப்படையில் ஜூன் 12ம் தேதிக்கு பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

விடுமுறை

இதனால், இன்றுக்குள் அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணிகள் உட்பட அனைத்து   முன்னேற்பாடுகளை முழுவீச்சில் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் பள்ளிகள் திறப்பையொட்டி, விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப வசதியாக, இன்று சென்னை, மதுரை, திருச்சி, கோவை உட்பட பல  இடங்களில் இருந்தும் 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.  

விடுமுறை

அதே போல் பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்களுக்கு பயணச்சீட்டு இல்லாமல் இலவசமாக பயணம் செய்ய நடத்துனர்கள் அனுமதிக்க வேண்டும் என அரசு பேருந்து நடத்துனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால்  கல்வியாண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேர பற்றாக்குறை ஏற்படும். இந்தப் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், பாடங்களை நடத்துவதற்கு ஏற்ற வகையில்  சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும். இனி வரும் கல்வி ஆண்டில், மாணவர்களுக்கு பாடச் சுமைகள் இல்லாதபடி ஆசிரியர்களுக்கு பணிச்சுமை ஏற்படாத வகையில் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web