என்னை விட்டு போயிட்டியே சாமி... மூளைக் காய்ச்சலால் பள்ளி மாணவன் பலி.. கதறித் துடிக்கும் பெற்றோர்...!!

 
நிதிஷ் குமார்

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையால்  பருவ கால நோய்களும் வரிசைகட்டி நிற்கின்றன. மருத்துவமனையில் காய்ச்சல் வார்டுகள் நிரம்பி வழிகின்றன. காய்ச்சல், இருமல், சளி என பள்ளிச்சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம் குடும்பமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  

காய்ச்சல்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலையில் வசித்து வருபவர்  கருப்பசாமி. இவர் பட்டாசு ஆலையில் கூலி தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார்.  இவரது மகன் நிதிஷ்குமார் 10 வயதாகும் இவர்  மேட்டமலையில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் 5ம்  வகுப்பு படித்து வருகிறார். இவர் காய்ச்சலால்  கடந்த சில நாட்களாகவே கடும் அவதிப்பட்டு வந்தார்.   இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காய்ச்சல் குறையவில்லை. இதனால்  சிகிச்சைக்காக நிதிஷ்குமார் விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  

ஆம்புலன்ஸ்


அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூளை காய்ச்சல் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு 2 நாட்களாக மூளைக்காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி நேற்று மாணவர் நிதிஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பலியான பள்ளி மாணவரின் காய்ச்சலுக்கு காரணம் வீட்டின் அருகே அதிகளவில் பன்றிகள் சுற்றி திரிகின்றன என கூறியுள்ளனர். ஊராட்சி நிர்வாகம் கிராம பகுதியில் சுற்றி திரியும் பன்றிகளை அங்கிருந்து  உடனடியாக அப்புறப்படுத்த  வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!