மணல் லாரி மோதி பள்ளி மாணவன் உயிரிழப்பு!

 
அமரேஷ்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் மணல் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் தந்தையுடன் பள்ளிக்குச் சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

மன்னார்குடி ராவணன் தெருவைச் சேர்ந்தவர் சிவகணேஷ். இவரது  மகன் அமரேஷ் (12). இவர் மன்னார்குடி புதிய புறவழிச் சாலையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் அமரேஷ் பள்ளிக்குச் சென்றுள்ளார்.

ஆம்புலன்ஸ்

ருக்மணிபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியே வந்த மணல் லாரி, நிலைதடுமாறி சிவகணேஷ் ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர். இதில் லாரியின் சக்கரம் அமரேஷ் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உத்தரபிரதேச போலீஸ்

இது குறித்து தகவல் அறிந்த மன்னார்குடி காவல் நிலைய போலீசார் நிகழ்விடத்திற்கு வந்து அமரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிவகணேஷும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?