இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு... திருச்செந்தூரில் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்!

 
இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று.

இந்த கோவிலில் இன்று ஜூலை 7ம் தேதி திங்கட்கிழமை காலை குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற உள்ளதால் கடந்த ஒரு வார காலமாகவே பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 

திருச்செந்தூர் கந்தசஷ்டி

இதனையொட்டி  யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மேலும் குடமுழுக்கிற்கான பணிகளும் ஏற்பாடுகளும் மும்மூரமாக செய்யப்பட்டன. 

திருச்செந்தூர் கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பின் குடமுழுக்கு விழா... நாள் நேரம் அறிவிப்பு!

இந்நிலையில் திருச்செந்தூர்கோயில் குடமுழுக்கையொட்டி, உள்ளூர் மக்களும் விழாவில் கலந்துக் கொள்ள வசதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஜூலை 7 ம் தேதி திங்கட்கிழமை ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை  மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?