இன்று இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை... கலெக்டர் உத்தரவு!

 
விடுமுறை

இன்று தமிழகத்தில் கன்னியாகுமரி, நாமக்கல் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் இன்று குடமுழுக்கு விழா நடைப்பெறுகிறது. இந்த ஆலயத்தில் 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார். பல்வேறு மாநிலங்களில், மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஆஞ்சநேயரை தரிசிக்க நாமக்கல் வருகின்றனர் 

கன்னியாகுமரி

2009ம் ஆண்டுக்கு பிறகு 14 ஆண்டுகள் கழித்து நவம்பர் 1ம் தேதி காலை 9 .30 மணி முதல் 10 .30 மணி வரை குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. இதனையொட்டி நாமக்கல்  மாவட்டத்தில் தாலுகா அளவில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் உமா உத்தரவு அளித்துள்ளார். இதற்கு மாற்றாக நவம்பர் 4ம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

நாமக்கல்

அதே போன்று, இன்று கன்னியாகுமரி மாவட்டம் தனியே தமிழகத்துடன் இணைக்கப்பட்ட நாளான இன்று நவம்பர் 1ம் தேதி, கொண்டாடப்பட்டு வருவதால், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web