ஜூலை 7ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை... ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் !

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோவில்.
இந்த திருக்கோவிலின் உபகோயிலான சிறியமலை அருள்மிகு யோக ஆஞ்சநேய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்நிலையில் ஆஞ்சநேயர் கோயில் குடமுழக்கு விழா ஜூலை 7 ம் தேதி நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு சோளிங்கர் வட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் ஜூலை 7ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பிறப்பித்துள்ளார். மேலும் அதனை ஈடுசெய்யும் வகையில் ஜூலை 19ம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!