ஜூன் 10 பள்ளிகள் திறப்பு... ஊர் திரும்பும் மக்கள்... அனைத்து வழித்தடத்திலும் சிறப்பு பேருந்துகளை மிஸ் பண்ணாதீங்க!

 
பேருந்து யுபிஐ

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 10ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், சொந்த ஊருக்கு விடுமுறைக்கு சென்றிருந்தவர்கள் ஊர் திரும்புவதற்கு வசதியாகவும், முகூர்த்த நாட்கள், வார இறுதி விடுமுறை நாட்களுக்காகவும் பொதுமக்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வரப்படுகிறது. இந்த சிறப்பு பேருந்துகளை மிஸ் பண்ணாதீங்க. தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் கொடுத்து உங்க பர்ஸைப் பதம் பார்த்துக்காதீங்க. 

நேற்று ஜூன் 7ம் தேதி முதல் நாளை ஜூன் 9ம் தேதி வரை வார விடுமுறை, முகூர்த்த நாட்கள், விடுமுறை முடிந்து சொந்த ஊர் திரும்புபவர்கள் என பொதுமக்களின் வசதியை முன்னிட்டு தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும்  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கப்படுகிறது. 

பேருந்து

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று ஜூன் 8ம் தேதி 535 பேருந்துகளும், நாளை ஜூன் 9ம் தேதி 570 பேருந்துகளும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமை அன்று 160 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அரசுப் பேருந்து

தினசரி இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக இன்று நாளை சனிக்கிழமை 570 பேருந்துகளும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 80 பேருந்துகளும், நாளை 80 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in மற்றும் டிஎன்எஸ்டிசி செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web