வைரல் வீடியோ... கே.எல். ராகுலுக்கு சராமாரி திட்டு... ரசிகர்கள் ஆவேசம்!

 
ராகுல்

 ஐபிஎல் போட்டிகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான மோசமான தோல்வியை தழுவியது. இதனையடுத்து  லக்னெள அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுடன் அணியின் உரிமையாளர் கோபமாக பேசும் காட்சிகள் குறித்த பதிவு வெளியாகி ரசிகர்களை ஆத்திரப்படுத்தியது. அதில் ஐபிஎல் லீக் ஆட்டத்தில்  லக்னெள அணி நிர்ணயித்த 166 என்ற வெற்றி இலக்கை, 10 ஓவர்களில் கடந்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது சன் ரைசர்ஸ் அணி.

சன் ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் 89(30) ரன்கள், அபிஷேக் சர்மா 75(28) ரன்கள் குவித்தனர். அதே போல்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் 89 ரன்கள் வித்தியாசத்தில் லக்னெள அணி படுதோல்வியை சந்தித்தது. சென்னையில் தோனியின் கடைசிப் போட்டியா? சற்றுநேரத்தில் டிக்கெட் விற்பனை அடுத்தடுத்து இரு தோல்விகளால் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதே நேரத்தில்  லக்னெள அணியின் ரன்ரேட்டும் மோசமாக குறைந்து வருகிறது. இனி வரும்  இரு போட்டிகளிலும் வென்றால்தான், லக்னெள அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும்.

 

 

இந்நிலையில், நேற்றைய போட்டி முடிந்ததும் மைதானத்திலேயே  அனைவரின் முன்னிலையிலும் ராகுலை அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கோபமாக சராமாரியாக திட்டினார். இக்காட்சிகள் நேரலையில் வந்த நிலையில் கே.எல்.ராகுலின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.  ஒரு அணியின் கேப்டனை அனைவரின் முன்னிலையிலும் இவ்வாறு தரக்குறைவாக நடத்துவது சரியில்லை எனவும்,  அடுத்தாண்டு கே.எல்.ராகுல் வேறு அணிக்கு மாற வேண்டும் எனவும் ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web