கதறும் அமெரிக்கர்கள்.... திவாலானது மூன்றாவது வங்கி! சீட்டுக்கட்டாய் சரிந்த பங்குச்சந்தை வர்த்தகம்!

 
firt republic bank ரிபப்ளிக் பேங்க் வங்கி

அமெரிக்காவில் இப்போது கடும் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வகையில், பெடரல் வங்கி வட்டி வீதங்களை உயர்த்தியது. இதனால், முதலீட்டாளர்களுக்கு கொடுக்க பணத்தை திரட்ட முடியாமல் சிலிகான்வேலி மற்றும் சிக்னேச்சர் வங்கிகள் கடந்த மார்ச் 2வது வாரத்தில் அடுத்தடுத்து திவாலாகி அதிர்ச்சியளித்தன.

இந்த பட்டியலில் அடுத்து இடம் பெற போகும் வங்கி எதுவாக இருக்கும் என்று அமெரிக்கர்களே பெட்டிங் வைத்து விளையாடும் வகையில் பல்வேறு வங்கிகளும், கடும் நிதி நெருக்கடியுடன் வரிசை கட்டத் தொடங்கி உள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் மற்றொரு முன்னணி பிராந்திய வங்கிகளில் ஒன்றான பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கி 1985ல் தொடங்கப்பட்டு, அந்நாட்டின் 14வது பெரிய வங்கியாக செயல்பட்டு வந்தது. 84 கிளைகளுடன் மொத்தம் 17 லட்சத்து 33 ஆயிரத்து 689 கோடியே 36 லட்சம் சொத்துக்களைக் கொண்ட இந்த வங்கி, நிதி நெருக்கடியில் சிக்கியது.

ரிபப்ளிக் அமெரிக்க ஷேர்

இந்த வங்கியை மீட்கும் நோக்கில் ஜேபி மோர்கன், பேங்க் ஆப் அமெரிக்கா, சிட்டி குரூப் ஆகியவை 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை வழங்கின. ஆனாலும், இந்த வங்கி இப்போது திவாலாகி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த வங்கியை ஜேபி மோர்கன் வங்கி, மீட்டு அதன் 84 கிளைகளையும் செயல்படுத்த உள்ளதாக அமெரிக்காவின் பெடரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால், பீதியில் இருந்த முதலீட்டாளர்கள் கொஞ்சம் நிம்மதியில் உள்ளனர். இருப்பினும் அமெரிக்க பங்குச்சந்தை நேற்றைய வர்த்தகத்தில் பலத்த சரிவை சந்தித்துள்ளன.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web