அலறும் பொதுமக்கள்... நடுரோட்டில் பதற வைக்கும் இளைஞர்களின் பைக் சாகசம்!

 
பைக் சாகசம்

உன்னோட சுதந்திரம் என்பது என்னுடைய மூக்கு நுனி வரை என்பார்கள். நடந்து செல்லும் பொதுமக்கள், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் என அனைவரையும் பதற வைத்தப்படி நடுரோட்டில் இளைஞர்கள் பைக் சாகசத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது பதற வைத்துள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையிலும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் சாலைகளில் அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசம் செய்யும் இளைஞர்கள் வீடியோ வெளியாகி வைரலான நிலையில், இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் போலீசாருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பைக் சாகசம் ரேஸ்

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சேலம் சாலை, புதுச்சத்திரம், பரமத்தி சாலையில் இளைஞர்கள் சாகசத்தில் ஈடுபட்டு அதை வீடியோவாக எடுத்து தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த புறவழிச்சாலையில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web