ரொம்ப கஷ்டப்படறேன்... உதவி பண்ணுங்க... கை, கால் செயலிழந்த நிலையில் கதறும் காமெடி நடிகர்!
தமிழ் திரையுலகில் வைகைப்புயல் வடிவேலுவுடன் பல படங்களில் நடித்து சிரிக்க வைத்தவர் நடிகர் வெங்கல்ராவ். ஆந்திராவின் விஜயவாடாவுக்கு அருகில் உள்ள கிராமத்தில் பிறந்தவர் வெங்கல் ராவ். இவர் சினிமாவுகு சண்டைக்காட்சிகளில் நடிக்க வந்து காமெடி நடிகராக அறியப்பட்டார். இவர் ஒரு படத்தின் சண்டைக்காட்சியின்போது ஏற்பட்ட காயத்தால் தன்னை காமெடி நடிகராக மாற்றிக்கொண்டார்.
1995ல் பி. வாசு இயக்கத்தில் பிரபு நடித்த 'கட்டுமரக்காரன்' படத்தில் அறிமுகமானார். 10 ஆண்டுகள் கழித்து தான் நகைச்சுவை வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நடிகர் வடிவேலுவுடன் இணைந்து 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். இடைப்பட்ட காலத்தில் வடிவேலு நடிப்பிலிருந்து விலகியிருந்த காலத்தில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் சிரமப்பட்டார் வெங்கல் ராவ்.

இவர் 2022ல் சிறுநீரகக் கோளாறு காரணமாக விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்அனுமதிக்கப்பட்டு இருந்தார். தற்போது நடிகர் வெங்கல் ராவ் கதறி அழும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் வெங்கல்ராவ். எனக்கு கை, கால் விழுந்திடுச்சு. நடக்க முடியல, பேச முடியல. விழுந்திடுச்சு. எடுக்க ஹாஸ்பிடலுக்கு காசு இல்லை. மருந்து கூட வாங்க முடியல. சினிமா நடிகர்கள், சங்கங்கள் உதவி செய்ங்க. உங்களால முடிந்த உதவி செய்யுங்க. இதுக்கு மேல என்னால பேச முடியல என கதறி அழுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
