செம அப்டேட்!! வாட்ஸ் அப்பில் ஸ்கிரீன் ஷேர்?! பயனர்கள் உற்சாகம்!!

 
வாட்ஸ் அப்

அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப் ஸ்கிரீன் ஷேரிங் வசதியை மெட்டா நிறுவனம் கொண்டு வர உள்ளது. இதன் மூலம்  வாட்ஸ் அப் ஸ்கிரீனை மட்டுமல்லாமல் , மொத்த ஸ்கிரீனையும் யாருக்கு வேண்டுமானாலும் பயனர்கள் ஷேர் செய்து கொள்ளலாம்.  இவை ஏற்கனவே   ஸ்கைப், கூகுள் மீட், ஜூம் என அனைத்து வீடியோ காலிங் ஆப்களிலும்  இந்த ஸ்கிரீன் ஷேர் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வாட்ஸ் அப்பிலும்  இந்த அம்சம் வர இருப்பதால் பயனர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். 

வாட்ஸ் அப்

சர்வதேச அளவில் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலி தகவல் பரிமாற்ற செயலிகளில் முண்ணனியில் இருந்து வருகிறது. பில்லியன் கணக்கில் பயனர்களை பெற்றுள்ள வாட்ஸ் அப் பயனர்களை தக்க வைக்கும் வகையிலும் தொழில்நுட்ப அடிப்படையில் அப்டேட் செய்யும் வகையிலும் அடுத்தடுத்த அப்டேட்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் செயலிகளை போலவே  வாட்ஸ் அப் செயலியிலும் Username முறை கொண்டு வரப்படும் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, பயனர்கள் தங்கள் கணக்குகளுக்கு தனித்துவமான பயனர் பெயர்களை அமைத்துக் கொள்ளலாம்.  அதாவது, வாட்ஸ் அப் யூசர்-நேம் கொண்டு ஒரு தனிநபர் வாட்ஸ் அப் கணக்கை அடையாளம் காணலாம்.  தற்போதுள்ள நடைமுறைப்படி மொபைல் எண் மூலமே அறியப்படுகிறோம். இனி யூசர் நேம் மூலம் எதிர்காலத்தில் வாட்ஸ் அப் பயனர்கள் தங்களின் பெயர்களை அடையாளப்படுத்திக் கொள்ளலாம்.


அதாவது ஒரே நேரத்தில் பலர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இணைந்திருக்கும் போது  அதை ஹோஸ்ட் செய்யும் நபரோ இல்ல வேறு யாரோ தங்களது மொபைல் ஸ்கிரீனை அனைவருக்கும் தெரியும்படி ஷேர் செய்து கொள்ளலாம். இந்த வசதியை மெட்டா நிறுவனம் விரைவில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.தற்போது இந்த அம்சம் சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  இந்த அம்சம் வந்தால், வாட்ஸ் பயன்படுத்தும் யார் வேண்டுமானாலும், வீடியோ கால் மூலம் நண்பர்களுடன் பேசும்போது, அவர்களது போனின் ஸ்கிரீனை அனைவருக்கும் தெரியும்படி ஷேர் செய்து கொள்ளலாம்.  

வாட்ஸ் அப்

அத்துடன் பயனர்களின் பிரைவஸிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் லாக் சாட் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் பயனர்கள் ஒருவருடனான சாட்-டை  பிரத்யேகமாக லாக் செய்து கொள்ளலாம். மேலும், வாட்ஸ்-அப் செயலியில் அனுப்பிய மெசேஜை 15 நிமிடங்களுக்குள் திருத்தி அனுப்பும் புதிய அம்சமும் வெளியாகி உள்ளது. 
ஏற்கனவே போட்டோ மற்றும் வீடியோக்களுடன் கேப்ஷன்  சேர்க்கும் வசதி பயன்பாட்டில் உள்ளது. அந்த கேப்ஷனை திருத்தி எழுதவும், டெலிட் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இத்தனை புதுப்புது அப்டேட்களால் பயனர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web