திருச்செந்தூரில் 50 அடி தூரம் உள்வாங்கிய கடல் - பக்தர்கள் அதிர்ச்சி!

 
திருச்செந்தூர்

விடுமுறை தினமான நேற்று வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் திருச்செந்தூரில் முருகனை தரிசிக்க வந்திருந்தனர். இந்நிலையில், திருச்செந்தூரில் நேற்று சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது. அலைகள் சற்று சீற்றத்துடன் காணப்பட்டது பக்தர்களை அதிர்ச்சியடைய செய்தது.

திருச்செந்தூரில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கடல் உள்வாங்குவது வாடிக்கையாக நிகழ்கிறது. நேற்று முன்தினம் அமாவாசை தினம் என்பதால், திருச்செந்தூரில் நேற்று சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது.

திருச்செந்தூர் முருகன்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து அய்யா வைகுண்டர் அவதாரபதி வரையிலும் கடல் வாங்கியது. இதனால் கடலில் இருந்த பாறைகள் வெளியே தென்பட்டன. கடல் உள்வாங்கியபோதும், அலைகள் சற்று சீற்றத்துடனே காணப்பட்டது. எனினும் வழக்கம்போல் பக்தர்கள் கடலில் புனித நீராடினர். பின்னர் மாலையில் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web