ரத்த சிவப்பாக மாறிய கடல் நீர்.... அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் சுற்றுலா பயணிகள்!!

தமிழகத்தின் அண்டை மாநிலமாம் புதுச்சேரியில் 2 கிமீ தூரம் நீளம் கொண்டது ராக் பீச். இங்கு பாறைகள் நிறைந்து காணப்படும்.இதன் இயற்கை எழிலை கண்டு ரசிக்க உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் தினசரி குவிந்து வருவது வழக்கமாக இருந்து வருகிரது. சுற்றுலா பயணிகள் மற்றும் வாக்கிங் செல்வோர் இந்த சாலையை தினசரி பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் செப்டம்பர் 17ம் தேதி குறிப்பிட்ட பகுதியில் கடல் நீரின் செம்மண் கலரில் நிறம் மாறியிருந்தது.
பிற பகுதிகளில் நீல வண்ணத்தில் இருக்கும் போது, அந்த பகுதி மட்டும் செம்மண் நிறத்தில் மாறியிருந்தது சுற்றுலாப்பயணிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஒரு கிலோ மீட்டர் அளவில் குருசுகுப்பம் பகுதி வரை செம்மண் நிறமாக காட்சியளித்தது. இதனால் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த சுற்றுலா பயணிகள் தலைமை செயலகம் எதிரே உள்ள மணல் பரப்பில் இறங்கி, நிறம் மாறியிருந்த கடலின் அழகை புகைப்படம் எடுத்து சென்றனர். ஆனால் கடல் நீர் நிறம் மாறியதற்கான காரணம் என்ன என்று கண்டறியமுடியவில்லை. அந்த நீரை சோதனைக்காக ஆராய்ச்சியாளர்கள் எடுத்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் ஏற்கனவே கடல் நீர் செம்மண் கலரில் மாறியிருந்த அதே பகுதியில் மீண்டும் இன்று காலை கடல் நீர் நிறம் மாறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடல் நீர் செம்மண் கலரில் மாறியதை பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் ஆச்சரியத்துடனும், அச்சத்துடனும் பார்த்து சென்றனர். மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 3வது முறையாக புதுச்சேரி கடல் நிறம் மாறியதால் ஏதாவது வானிலை மாற்றம் ஏற்படக்கூடுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!