சொகுசு காருக்குள் ரகசிய அறை.. இலங்கைக்கு கடத்த இருந்த 200 கிலோ கஞ்சா பறிமுதல்!

 
கஞ்சா

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் போலீஸார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கீழையூர்  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலப்பிடாகை பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, ​​வெளி மாவட்ட பதிவு எண் கொண்ட மூன்று சொகுசு கார்கள் வரிசையாக வந்தன. சந்தேகம் அடைந்த போலீசார் அந்த கார்களை மறித்து சோதனை நடத்தினர். அப்போது காருக்குள் சீட் கவர், கார் கதவு, டிக்கி என பல ரகசிய அறைகள் அமைக்கப்பட்டு அதில் கஞ்சா பொட்டலங்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, கடத்தலில் ஈடுபட்ட விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி, சிவமூர்த்தி, திருப்பூர் மாவட்டம் இடுவாய் பகுதியைச் சேர்ந்த மணிராஜ், புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடியைச் சேர்ந்த கவுதமன் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஒடிசா மாநிலத்தில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள், வேதாரண்யம் வழியாக இலங்கைக்கு படகு மூலம் கடத்த இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 200 கிலோ கஞ்சா, 3 சொகுசு கார்கள், விலை உயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் சொகுசு கார்களை கீழையூர்  காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் நேரில் ஆய்வு செய்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘கடந்த ஓராண்டில் நாகை மாவட்டத்தில் மட்டும் இதுவரை இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 1200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாகையில் சொகுசு காரில் ரகசிய அறைகள் அமைத்து கஞ்சா கடத்தியவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web