பாதுகாப்பு படை வீரரின் மனைவி தற்கொலை... திருமணமான 2 ஆண்டுகளில் சோகம்!

 
தற்கொலை

 புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் கல்பருத்திவிளை பகுதியில் வசித்து வருபவர்  அனில். இவர் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சிந்து.  கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில்  18ம் தேதி வீட்டில் இருந்த சிந்து திடீரென விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். 

ஆம்புலன்ஸ்


இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் சிந்து பரிதாபமாக உயிரிழந்தார்.  இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைக்கப்பட்டது.  இதுகுறித்து சிந்துவின் தந்தை சுரேஷ்குமார் புதுக்கடை போலீசில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். 

உத்தரபிரதேச போலீஸ்
இது குறித்து  அந்த மனுவில், “எனது மகள் சிந்துவுக்கும், அனிலுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு அவரது மாமியார் மற்றும் கணவரின் சகோதரர் ஆகியோர் கொடுமைப்படுத்தினர். இதனால், மனவருத்தத்தில் இருந்து வந்த எனது மகள் தற்கொலை செய்து கொண்டார். எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார். அந்த புகாரின் பேரில் சிந்துவின் கணவர் அனில், அவரது தாயார் கலா, அனிலின் சகோதரர் அனு ஆகியோர் மீது புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?