சீமான் கைது... சென்னையில் தடையை மீறி போராட்டம்!

 
 சீமான் கைது

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி போராட்டம் நடத்த வந்த நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானை போலீசார் கைது செய்தனர். 

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று காலை 10 மணிக்கு சென்னையில் நடைபெறவிருந்த நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்க மறுத்திருந்தனர். 

 சீமான் கைது

அனுமதி கேட்டு அளிக்கப்பட்டிருந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதை விட அதிக நபர்கள் போராட்டத்தில் கலந்துக் கொள்ள உள்ளதாக தகவல்கள் கிடைத்ததால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

மேலும் புத்தாண்டு தினத்திற்கு அதிகமான போலீசார் பாதுகாப்பு பணிகளுக்கு அனுப்பப்படுவதால் பாதுகாப்பு வழங்குவதில் சிரமம் என காவல்துறை விளக்கம் அளித்து இருந்தனர்.

இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை தடையை மீறி போராட்டம் நடத்த வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை போலீசார் கைது செய்தனர். 

 சீமான் கைது

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் மகளிர், இளைஞர் மற்றும் மாணவர் பாசறை பொறுப்பாளர்களையும் இன்று காலை போலீசார் கைது செய்தனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web