சீமான் அதிர்ச்சி... ஜெயிக்கலைன்னாலும் பரவாயில்லை... 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் வேட்பாளர்களுக்கு டெபாசிட் காலி!

 
சீமான் அதிர்ச்சி... ஜெயிக்கலைன்னாலும் பரவாயில்லை... 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் வேட்பாளர்களுக்கு டெபாசிட் காலி!

எந்த தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் ஜெயிக்கப் போவதில்லை என்று தெரிந்தும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாற்றத்தை நோக்கியும் போட்டியிடுவதாக களமிறங்கிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள், ஜெயிக்கலைன்னாலும் பரவாயில்லை... போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் அத்தனைப் பேரும் டெபாசிட் தொகையை இழந்துள்ளதால் சீமான் அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி இல்லாமல் தனித்தே களம் காணும் நாம் தமிழர் கட்சி இந்த முறையும் 40 தொகுதிகளிலும் தனித்தே களமிறங்கியது. சூறாவளியாய் சுற்றுப்பயணம் செய்து சுழன்றடித்து பிரச்சாரம் செய்தார் சீமான். விவசாயி சின்னம் கடைசி வரை கிடைக்காத நிலையில் மைக் சின்னம் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே தமிழகம் முழுவதும் கட்சி சின்னத்தைக் கொண்டு சேர்த்த நேர்த்தி பிற கட்சித் தலைவர்களை மிரள செய்தது நிஜம். 

பல தொகுதிகளில் நாம் தமிழர் வேட்பாளர்கள் எழுப்பிய கேள்விகள் நியாயமாகவும் நேர்த்தியாகவும் இருந்தது. உண்மையைத் தானேய்யா பேசுறாங்க? என்று பொதுமக்கள் ஆர்வம் காட்டினார்கள். ஆனாலும், வாக்குப்பதிவு நாள் நெருங்க நெருங்க பண பலமும், இலவச அறிவிப்புகளும் வாக்களர்களை மிரள செய்தது. 

இந்நிலையில், தமிழ்நாடு மட்டுமின்றி போட்டியிட்ட புதுச்சேரியிலும் சேர்த்து 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளது. 10 தொகுதிகளில் சராசரியாக 40 ஆயிரம் வாக்குகள், 6 தொகுதிகளில் 50 ஆயிரம் வாக்குகள், 20 தொகுதிகளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சி, 4 தொகுதிகளில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது.

திமுக, அதிமுகவிற்கு அடுத்த கட்சியாக தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக பாமக, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, தேமுதிக, பாஜக போன்ற கட்சிகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளி மீண்டும் களத்தில் கம்பீரமாக தான் நிற்கிறது நாம் தமிழர். சில தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகளைப் பெற்று அதிமுகவை பின்னுக்கு தள்ளியிருக்கிறது. கள்ளக்குறிச்சியில் பாமகவை பின்னுக்குள் தள்ளிய நாம் தமிழர் கட்சி, திருச்சியில் அமமுகவை பின்னுக்கு தள்ளியுள்ளது.

ஆனாலும் போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி டெபாசிட் தொகையை இழந்துள்ளது அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web