ஆடு, மாடுகளுக்கு முன்பு பேசும் அளவுக்கு சீமான் பரிதாபமாக உள்ளார்... அமைச்சர் சிவசங்கர்!
அரியலூரில் புதிய வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்து போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உரையாற்றினார். அதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரக்தியின் விளிம்பில் இருக்கிறார். முதல் நாள் பேசியதையே, மறுநாள் மறுத்துப் பேசுகிறார். அடுத்த நாள் வேறொரு புதுக் கதையை, அவரே திரித்துப் பேசுகிறார். தான் பேசியதையே வேறு யாரோ கண், காது, மூக்கு வைத்து திரித்துப் பேசுவதாக அவரே பேசுகிறார்.

பாஜக, பழனிசாமி தோளில் ஏறி உட்கார்ந்து கொண்டு, பாஜகவின் கொள்கைகளை பழனிசாமி பேசுகின்ற சூழலுக்கு கொண்டு வந்து விட்டது. எனவே, சுமையின் வலி தாங்க முடியாமல் இவ்வாறு பேசி வருகிறார். திமுகவின் கூட்டணிக் கட்சிகள் வலுவாக இருப்பதைப் பார்த்து எல்லோரையும் விமர்சனம் செய்யும் நிலைக்கு வந்து விட்டார். அவர் நினைப்பது நடக்கவில்லை. அவர் எதிர்பாராத சுமையை சுமப்பதால் விரக்தியின் விளிம்பில் நின்று இதையெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்.

சீமானின் நிலை இப்படி ஆகிவிட்டது என்பதை நினைக்கும்போதே, பரிதாபமாக இருக்கிறது. அவர் மனிதனையே மனிதனாக நினைத்துப் பேச மாட்டார். மாக்களாகத்தான் நினைத்து வாய்க்கு வந்தபடி பேசுவார். அதன் உச்சமாக மதுரையில் ஆடு, மாடுகளுக்கு முன்பு பேசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவரது உண்மை நிலையை வெளிப்படுத்தும் வகையில் அந்த காட்சிகளை தமிழக மக்கள் பார்த்து விழுந்து, விழுந்து சிரிக்கும் சூழலை ஏற்படுத்தி விட்டார். அவரது கடைசி கட்டம் நெருங்கிக் கொண்டிருப்பதை இது காட்டுகிறது எனக் கூறியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
