மாடு , மரத்தை தொடர்ந்து மலைகளின் மாநாடு ... சீமான்.!

 
சீமான்
 


 
தர்மபுரி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலைகளின் மாநாடு நடத்த இருப்பதாக  அறிவித்துள்ளார். மாடு, மரங்களின் மாநாட்டை தொடர்ந்து மலைகளும், நீர்நிலைகளும்  அழிந்து வருவதை  காப்பாற்றும் வகையில் மலைகளுக்கான மாநாட்டை நடத்த சீமான் திட்டமிட்டுள்ளார்.


இது குறித்து  நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  செய்தியாளர் சந்திப்பில்  , ”மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடாக திருச்சி மாநாடு அமையும். அதற்கடுத்து மலைவளமே, மண்வளம் எனும் நோக்கில் தருமரிபுரி, கிருஷ்ணகிரியில் மலைகளின் மாநாடு, தூத்துக்குடியில் கடல் அம்மா மாநாடு, தஞ்சாவூரில் தண்ணீரின் மாநாடு நடைபெறும்” என அறிவித்துள்ளார்.

இது குறித்து கூடுதல் தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை, ஆனால் இந்த மாநாடு மலைகள் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்படலாம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் இது நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. முந்தைய மாநாடுகளைப் போலவே, இதுவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் அமையலாம்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?