கிலோ ரூ.50க்கு விற்பனை... திடீரென எகிறத் தொடங்கியது தக்காளி விலை... இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

திடீரென தக்காளி விலை உயர தொடங்கியிருப்பது இல்லத்தரசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ தக்காளி, திடீரென விலை உயா்ந்து ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்டது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது..
தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து காய்கறிகள் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன. கடந்த சில நாட்களாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து வந்ததால் தக்காளியின் விலையும் உயா்ந்துள்ளது.
அதன்படி கடந்த வாரம் வரை ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனையாகிக் கொண்டிருந்த ஒரு கிலோ தக்காளி, நேற்று மொத்த விலையில், ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டது.
இது தவிர வேறு சில காய்கறிகளின் விலையும் சற்று உயா்ந்துள்ளது. அதன்படி, கடந்த வாரம் ரூ.40க்கு விற்பனையான ஒரு கிலோ கேரட் ரூ.70, ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் ரூ.100, ரூ.35க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் ரூ.50, ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்ட வெண்டைக்காய் ரூ.45, ரூ.50-க்கு விற்பனையான முருங்கைக்காய் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!