காங்கிரஸும் தனித்து நின்றிருந்தால் அதிக வாக்குகளைப் பெற்றிருப்போம்... செல்வப் பெருந்தகை பேட்டி!

 
செல்வப் பெருந்தகை
இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , நேற்று காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள்  காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்ய வேண்டும் என்று  தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டு இருப்பதாக கூறினார்  .

மேலும், உத்திரபிரதேச உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு இடங்களில் இந்தியா கூட்டணிக்கு சொற்ப வாக்கு வித்தியாசத்தில்  தோல்வியை தழுவி இருப்பதாகவும் இதில் தேர்தல் ஆணையம் பல்வேறு முறைகேடு ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டினார். 
பிரேமலதாவின் புகார் குறித்து கேள்வி எழுப்புகையில், விருதுநகரில் வாக்கு எண்ணிக்கை நியாயமாக நடைபெற்று உள்ளது. சென்னைக்கு வந்து இது போன்ற அவதூறாக கருத்து தெரிவிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் . வாக்கு எண்ணிக்கையில் தவறு நடைபெற்றிருந்தால் அங்கேயே அந்த அலுவலரிடம் புகார் தெரிவித்து இருக்க வேண்டும். காங்கிரஸ் உறுப்பினரின் மீது தேவையற்ற கருத்துக்களை பரப்ப வேண்டாம் என்றார். 
எஸ்.பி.வேலுமணி நேற்று பேட்டியளித்த போது பாஜகவுடன் கூட்டணி இருந்தால் 35 இடத்தில் வெற்றி பெற்றிருப்போம் என்று கூறியிருப்பது  குறித்த கேள்விக்கு, அவருக்கு எப்படி இது போன்ற ஆசை வந்தது என்று தெரியவில்லை,  அதிமுக மறைந்த தலைவர்களை பற்றி அவதூறாக அண்ணாமலை பேசி வந்ததை மறந்து விட்டாரா? என்றார். 
பாஜக கூட்டணி உள்ள சில கட்சிகள் சாதி ரீதியாக வாக்குகளை வைத்துள்ளார்கள். அந்த வாக்குகளை பாஜக பெற்றுவிட்டு இவர்கள் வாக்கு என்று பேசுவது விந்தையாக உள்ளது. கடந்த காலங்களில் அதிமுகவும் காங்கிரஸும் தனித்து நிற்கும் போது ஒரு சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றும். காங்கிரஸ் கட்சியும் தற்போது தனித்திருந்தால் அதிக வாக்குகளை பெற்றிருக்கும். சில காரணங்களுக்காக கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தோம் என்றார்.
மேலும்,  தற்போது மோடி ஆட்சி அமைப்பது அது பாஜகவின் ஆட்சி அல்ல கூட்டணி ஆட்சி என்று  புரிந்து கொண்டு அண்ணாமலை நாவடக்கத்துடன் செயல்பட வேண்டும் . 99ல் இருந்த எங்களது கட்சியின் எம்பிகள் எண்ணிக்கை தற்போது  எங்களிடமிருந்து பிரிந்து சென்ற ஒரு சுயேட்சை எம்பி காங்கிரஸ் கட்சிகள் இணைந்துள்ளார்   100 எம்.பி.களை கொண்டு பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக  பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி செயல்படும்  என்றார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web