செம குத்தாட்டம்... ஹீரோயினெல்லாம் ஓரமா போய் விளையாடுங்க... அம்பானி வீட்டு திருமண விழாவில் பிரியா அட்லி கலக்கல் வீடியோ!

 
அட்லி

’ஊ.. சொல்றீயா மாமா...’ என கிறங்கடிக்கும் குரலில் எப்படி பாட்டு ஹிட்டாச்சு... அதை விட அட்லி படத்தைப் போலவே தெறி ஹிட்டாகி இருக்கிறது இயக்குநர் அட்லி மனைவி ப்ரியா, அம்பானி வீட்டு திருமண விழாவில் போட்ட குத்தாட்டம். இந்த வீடியோவைப் பகிரும் ரசிகர்கள், ஹிட் ஹீரோயின்கள் எல்லாம் அப்படி ஓரமா போய் விளையாடுங்க... ப்ரியா படங்களில் குத்தாட்டம் போட வரலாமே என்று சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஜூலை 12ம் தேதி ஜியோ உலக மாநாட்டு மையத்தில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடைபெற உள்ள நிலையில்  திருமணத்துக்கு முன்னதான சடங்குகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருமணத்துக்கு முந்தைய சங்கீத் விழா மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த கொண்ட்டாட்டத்தில் பல பாலிவுட் திரைபிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இயக்குனர் அட்லி மற்றும் அவரது மனைவி பிரியா அட்லியும் கலந்து கொண்டனர். இருவரும்  ஒரே மாதிரியான டிசைன் கொண்ட காஸ்டியூம் அணிந்து  நடனம் ஆடினர்.  இதில் பிரியா அட்லி கிளாமரான உடையுடன் இருந்த  புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளும் பாலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகையுமான ஜான்வி கபூர் மயில் போன்ற உடையில் வந்திருந்தார். அந்த உடை அணிவதற்கான காரணத்தையும் மிக பெரிய விளக்கமாக கொடுத்து இருந்தார். "இந்த கொண்டாட்டத்தில் அர்த்தமுள்ள ஒரு உடையை அணிய விரும்பினேன்.

அட்லி பிரியா

இயற்கை அழகு, வனவிலங்கு என முற்றிலும் வித்தியாசமான ஒரு தனிமையான உலகம், நேசிக்கும் மனிதர்கள் என ஜாம்நகரில் எனக்கு ஏராளமான ஸ்பெஷல் மெமரிஸ் உள்ளன.  ஜாம்நகரில் நீங்கள் எங்கு பார்த்தாலும், அழகான மயில்கள்  வரவேற்கும். புல்வெளிகளுக்குள் நுழைந்தால்  இறகுகளை அசைப்பது, சாலைகளைத் தாண்டிச் செல்வது, சில சமயங்களில் காலை உணவை உண்பது என அவை உல்லாசமாக சுற்றித் திரியும்.  அதனால் மயில் நிற லெஹங்கா அணிந்ததற்கான விளக்கம் அளித்தார்.  ஆனந்த் மற்றும் ராதிகா இருவருமே அவர்களின் வீட்டை நம்முடையதுபோல உணர வைப்பார்கள். இந்த மயில் லெஹங்காவை உருவாக்கிய கலைஞர்களுக்கு நன்றிகள். என்னை சிறப்பாக உணர வைத்ததற்கு நன்றி" என குறிப்பில் தெரிவித்து இருந்தார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web