செம.. டி20 உலகக் கோப்பையை ஃப்ரீயா பார்க்கலாம்... ஹாட்ஸ்டார் அதிரடி!

 
டி20 கிரிக்கெட்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இந்த ஆண்டு ஐசிசி ஆண் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையை அதன் OTT தளத்தில் மொபைலில் பார்க்க இலவசம் என்று அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பை தொடர்கள் ஹாட்ஸ்டாரில் இலவசமாக ஒளிபரப்பப்பட்டது.

இது குறித்து அறிவித்துள்ள டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இந்தியாவின் தலைவர் சஜித் சிவானந்தன், "ஐசிசி ஆண் டி20 உலகக் கோப்பை- 2024 தொடரை மொபைலில் இலவசமாக வழங்குவதன் மூலம், கிரிக்கெட் விளையாட்டை மேலும் அணுகக்கூடியதாகவும், நாடு முழுவதும் பரந்த பார்வையாளர்களை சென்றடையவும் நாங்கள் இலக்கு வைத்துள்ளோம். கடந்த ஆண்டு ஆசியக் கோப்பை மற்றும் ஐசிசி ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை, கோப்பை போட்டிகளை மொபைலில் இலவசமாக்கினோம், இது எங்கள் பார்வையாளர்களை கணிசமாக விரிவுபடுத்த உதவியது,” என்றார்.

உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்று ம் மேற்கிந்திய தீவுகளில் ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை நடைபெறுகிறது. இந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட 20 நாடுகள் பங்கேற்று மொத்தம் 55 போட்டிகளில் விளையாடி வருகின்றன.

இதில் இந்திய அணி ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளது. அதே பிரிவில் பாகிஸ்தான் உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டி ஜூன் 9-ம் தேதி நியூயார்க்கில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web